யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
யு.எஸ்.:அதிபர் தேர்தலுக்கு முன் அணுசக்தி ஒப்பந்தம்
வாஷிங்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008   ( 14:10 IST )
இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன் நடைமுறைப்படுத்த முடியும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அணுசக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, இந்தியாவில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடியை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வந்தது.

நேற்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றிப் பெற்றதை அமெரிக்கா வரவேற்றுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் டானா பெரினோ நிருபர்களிடம் கூறியதாவது:

விரைவில் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்படும்.

சமீபத்தில் ஜப்பானில் நடந்த ஜி-8 மாநாட்டில் பங்கேற்ற அதிபர் புஷ் மற்றும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவது குறித்து விவாதித்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே சர்வதேச அணுசக்தி முகமை மற்றும் அணுசக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவிடம், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்ததிற்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நெல்சன் மண்டேலாவுக்கு காந்தி விருது!
டோனி பிளேரை சந்திக்கிறார் ஒபாமா!
நேபாள அதிபராக யாதவ் இன்று பதவியேற்பு!
மத்திய அரசு வெற்றி: அமெரிக்கா வரவேற்பு
தாலிபானை வீழ்த்த இந்திய-பாக். உறவு அவசியம் : ஒபாமா
பு‌லிக‌ள் போ‌ர்‌நிறு‌த்தம்: இலங்கை நிராக‌ரிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...