யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
நெல்சன் மண்டேலாவுக்கு காந்தி விருது!
டர்பன் (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008   ( 13:49 IST )
தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுக்கு, உலக அமைதிக்கான மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா கடந்த வெள்ளிக்கிழமை தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார்.

இந்நிலையில், மகாத்மா காந்தி மேம்பாட்டு அமைப்பின் சார்பில் டர்பன் நகரில் நடந்த விழாவில், மண்டேலாவுக்கு மகாத்மா காந்தி விருது வழங்கப்பட்டது.

சமூகத்திற்கு ஆற்றிய தொண்டு, தியாகத்தின் மூலமாக உலக மக்களின் இதயத்தை தொட்டதற்காக இந்த அமைதி விருது வழங்கப்பட்டது.

விழாவில் மண்டேலா பங்கேற்கவில்லை என்பதால், அவரது சார்பில் அவரது நெருங்கிய நண்பரும், அரசியல் ஆலோசகருமான அகமது கத்ராதா இந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

விருது பெற்றது குறித்து மண்டேலா சார்பில் கருத்து தெரிவித்த அவர், "இன வேறுபாடு, தீண்டாமை போன்றவற்றை ஒழித்து, தென் ஆப்பிரிக்காவை ஜனநாயகப் பாதைக்கு அழைத்து செல்ல மண்டேலா மேற்கொண்ட முயற்சியை நாம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும்" என்றார்.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
டோனி பிளேரை சந்திக்கிறார் ஒபாமா!
நேபாள அதிபராக யாதவ் இன்று பதவியேற்பு!
மத்திய அரசு வெற்றி: அமெரிக்கா வரவேற்பு
தாலிபானை வீழ்த்த இந்திய-பாக். உறவு அவசியம் : ஒபாமா
பு‌லிக‌ள் போ‌ர்‌நிறு‌த்தம்: இலங்கை நிராக‌ரிப்பு
மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...