யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
டோனி பிளேரை சந்திக்கிறார் ஒபாமா!
அம்மான் (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008   ( 13:47 IST )
மெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளர் பாரக் ஒபாமா வரும் 26ம் தேதி பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் புஷ்சின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. புதிய அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பரில் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிட பாரக் ஒபாமா தேர்வாகியுள்ளார். இவரே அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று பெரிதும் நம்பப்படுகிறது.

இந்நிலையில், சர்வதேச அளவில் ஒபாமா சுற்றுப் பயணம் செய்துவருகிறார்.

இந்த வாரம் அவர் லண்டனில் சுற்றுப் பயணம் செய்து பிரதமர் கார்டன் பிரவுன், எதிர்கட்சித் தலைவர் டேவிட் காமரூன் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

அதோடு, முன்னாள் பிரதமர் டோனி பிளேரையும் வரும் 26ம் தேதி சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, மின் சக்தி மற்றும் சுற்றுப்புற சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் டோனி பிளேர் ஆற்றியுள்ள பணிகள் குறித்து ஒபாமா கேட்டறிகிறார்.

இந்த சந்திப்பு, எதிர்காலத்தில் ஒபாமாவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவரது பிரச்சார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நேபாள அதிபராக யாதவ் இன்று பதவியேற்பு!
மத்திய அரசு வெற்றி: அமெரிக்கா வரவேற்பு
தாலிபானை வீழ்த்த இந்திய-பாக். உறவு அவசியம் : ஒபாமா
பு‌லிக‌ள் போ‌ர்‌நிறு‌த்தம்: இலங்கை நிராக‌ரிப்பு
மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?
நேபாள அதிபராக யாதவ் நாளை பதவியேற்பு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...