|
| புலிகள் போர்நிறுத்தம்: இலங்கை நிராகரிப்பு |
| கொழும்பு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008 ( 14:54 IST ) | |
விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
இலங்கையில் வரும் 27ம் தேதி சார்க் மாநாடு துவங்கி, ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, தற்காலிக போர் நிறுத்தம் செய்வதாக புலிகள் அமைப்பு நேற்றிரவு அறிவித்தது. ஆனால், இதை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
இதுகுறித்து, இலங்கை அதிபர் மகிந்த ராஜ்பக்சேவின் சகோதரரும், பாதுகாப்பு செயலருமான கோத்தபாய ராஜபக்சே கூறியதாவது:
போரில் படைகள் பலவீனம் அடையும்போது, தங்களது பலத்தை புதுப்பித்துக்கொள்ள புலிகளுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இதற்கான தந்திரம்தான் இந்த போர் நிறுத்த அறிவிப்பு.
இதை ஏற்க நாங்கள் தயாராக இல்லை. புலிகளை நாங்கள் நம்ப வேண்டுமென்றால், முதலில் அவர்கள் தங்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|