யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காதது ஏன்?
டாக்கா (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008   ( 14:11 IST )
மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டதே, அவருக்கு நோபல் பரிசு கொடுக்க முடியாத கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது என்று நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

காந்திஜிக்கு நோபல் பரிசு கொடுக்க முடியாமல் போனதற்கான காரணம் குறித்து ' தி டெய்லி ஸ்டார்' என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் நோபல் கமிட்டி தலைவர் ஓலே டான்போல்ட் எம்ஜோஸ் விவரித்துள்ளார்.

"நோபல் பரிசுக்கான பரிந்துரைப் பட்டியலில், காந்தி ஐந்து முறை இடம்பெற்றிருந்தார்," என்றார் அவர்.

"முதல் நான்கு முறை, அவரைப் பரிசுக்குத் தேர்வு சேய்ய பெரும்பான்மையான தேர்வுக்குழுவினர் மறுத்துவிட்டனர். அதன்பிறகு, 1948-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை காந்திக்குக் கொடுக்கலாம் என்று 1947-ல் தேர்வுக்குழு ஒருமனதாக முடிவு செய்தது.

ஆனால், 1948-ம் ஆண்டு காந்தி படுகொலை செய்யப்பட்டது, தேர்வுக்குழுவை மிகவும் சோகத்துக்கு ஆளாக்கிவிட்டது. கடைசி நேரத்தில், நோபல் பரிசுப் பட்டியலில் காந்தியை இடம்பெறச் செய்ய முடியாமல் போய்விட்டது," என்றார் எம்ஜோஸ்.

கடந்த 1948-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, யாருக்கும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நேபாள அதிபராக யாதவ் நாளை பதவியேற்பு!
சார்க் மாநாடு: புலிகள் போர் நிறுத்த அறிவிப்பு
மைனாரிட்டி அரசு அமைந்தாலும் ஒப்பந்தம் உறுதி: யு.எஸ்.
ஒ‌லி‌ம்‌பி‌க் துவக்க விழாவில் புதின்
பாக்.கில் உள்ள தீவிரவாதிகளை தாக்குவோம் : ஒபாமா
சீனாவில் இரட்டை வெடிப்பு ; 2 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...