|
| நேபாள அதிபராக யாதவ் நாளை பதவியேற்பு! |
| காத்மாண்டு (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008 ( 10:41 IST ) | |
நேபாள நாட்டின் முதல் அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ராம்பரன் யாதவ், நாளை பொறுப்பேற்கிறார்.
நேபாளத்தில் கடந்த 240 ஆண்டுகளாக நடந்து வந்த மன்னராட்சி சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
கடந்த ஏப்ரல் 10ம் தேதி நடந்த அரசியல் நிர்ணய சபைக்கு நடந்த தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நேபாளம் ஜனநாயக நாடாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் நேபாள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராம்பரன் யாதவ், மாவோயிஸ்ட் கட்சி சார்பில் ராம் ராஜா பிரசாத் சிங் உள்பட 3 பேரிடையே கடும் போட்டி நிலவியது. எனினும், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மறு தேர்தல் நடைபெற்றது.
இதில், ராம்பரன் யாதவுக்கு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, மாதேஷி மக்கள் உரிமைக் கழகம் ஆகியவை ஆதரவு தெரிவித்தன. இதன் மூலம் நேபாள நாட்டின் முதல் அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
நாளை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில், அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதி, யாதவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|