யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சார்க் மாநாடு: புலிகள் போர் நிறுத்த அறிவிப்பு
கொழும்பு (ஏஜென்சி), 22 ஜூலை 2008   ( 10:15 IST )
இலங்கையில் சார்க் மாநாடு நடைபெறவுள்ளதையொட்டி விடுதலைப் புலிகள் தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

15வது சார்க் மாநாடு வரும் 27ம் தேதி இலங்கையில் தொடங்குகிறது. இம்மாநாடு ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தலைவர்கள் கொழும்பு வருகின்றனர். இதன் காரணமாக, இலங்கையில் உயர்மட்ட அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், சார்க் மாநாடு நடைபெறுவதையொட்டி, விடுதலை புலிகள் போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர். 'வரும் 26ம் தேதி முதல் மாநாடு முடியும் வரை இந்த போர் நிறுத்தம் அமலில் இருக்கும். என்றாலும், லங்கை ராணுவம் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்' என்றும் புலிகள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையை தவிர வேறு யாரும் எங்களுக்கு எதிரியல்ல என்று கூறியுள்ள புலிகள், இந்த மாநாடு வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மைனாரிட்டி அரசு அமைந்தாலும் ஒப்பந்தம் உறுதி: யு.எஸ்.
ஒ‌லி‌ம்‌பி‌க் துவக்க விழாவில் புதின்
பாக்.கில் உள்ள தீவிரவாதிகளை தாக்குவோம் : ஒபாமா
சீனாவில் இரட்டை வெடிப்பு ; 2 பேர் பலி
நேபாளத்தில் ஜனாதிபதி தேர்தல்: மாவோஸ்ட்டுக்கு சிக்கல்
ஈராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் வாபஸ்: பிரவுன்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...