|
| மைனாரிட்டி அரசு அமைந்தாலும் ஒப்பந்தம் உறுதி: யு.எஸ். |
| வாஷிங்டன் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 22 ஜூலை 2008 ( 09:30 IST ) | |
இந்தியாவில் பெரும்பான்மை இல்லாத அரசாக இருந்தாலும் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம் என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு, மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான துணைச் செயலாளரும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய குழுவின் தலைவருமான ரிச்சர்ட் பவுச்சர் கூறியதாவது:
மன்மோகன் சிங் தலைமையிலான ஐமுகூ அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்தால், அடுத்த தேர்தல் நடந்து முடியும் வரை நிறுத்துங்கள் என்றோ அல்லது வேறொரு கூட்டணி அரசு அமையும் வரை பொறுத்திருங்கள் என்றோ கூறுவதற்கில்லை.
அரசமைப்பு ரீதியாக அமைந்த அரசுடன் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. எந்த அரசு அமைந்தாலும், ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம்.
பெரும்பான்மை இல்லாத அரசுகளுடன் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதில் அமெரிக்காவிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. உலகின் பல நாடுகளில் பெரும்பான்மை இல்லாத அரசுதான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|