|
| ஒலிம்பிக் துவக்க விழாவில் புதின் |
| மாஸ்கோ (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜூலை 2008 ( 18:39 IST ) | |
பீஜிங் ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் பங்கேற்பார் என அவரது செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி ஆகியோருடன் ஒலிம்பிக் துவக்க விழாவில் ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போதைய பிரதமருமான புதின் பங்கேற்பார் என செய்திகள் வெளியாகின. எனினும் அது உறுதி செய்யப்படாத தகவலாக இருந்தது.
இந்நிலையில், மாஸ்கோ நகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதினின் செய்தித் தொடர்பாளர் திமிட்ரி பெஸ்கோவிடம் இது குறித்து கேட்டபோது, பீஜிங்கில் வரும் ஆகஸ்ட் 8 ம் தேதி நடைபெறும்ஒலிம்பிக் துவக்க விழாவில் புதின் நிச்சயம் பங்கேற்பார் என்றும், அது தொடர்பான ஏற்பாடுகளை ரஷ்ய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாவும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|