|
| ஆஸி. போதகர்களின் பாலியல் கொடுமை: போப் வருத்தம் |
| சிட்னி (ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஜூலை 2008 ( 15:13 IST ) | |
ஆஸ்திரேலியாவிலுள்ள ரோமன் கத்தோலிக்க மதபோதகர்களால், சிறார்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதற்கு, 16-வது போப் பெனடிக் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் மதக் கூட்டத்தில் போப் இன்று பேசுகையில், "இந்நாட்டிலுள்ள மதபோதகர்கள் சிலரால், சிறார்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியிருப்பது, மிகவும் வெட்கப்பட வேண்டிய நிகழ்வாகவே எண்ணுகிறேன்," என்றார்.
பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறார்களின் வலிக்காகவும், பாதிப்புகளுக்காகவும் தாம் மிகவும் வருந்துவதாக தெரிவித்த அவர், "இத்தகைய கொடுமைகளை இழைத்தவர்களை நீதியின் முன்பு நிற்கவைக்க வேண்டியது அவசியம்," என்று கூறினார்.
ஆஸ்திரேலியாவில் சிறுவர், சிறுமியர்கள் பலரையும், கத்தோலிக்க மதபோதகர்கள் சிலர் பாலியல் ரீதியாக கொடுமை செய்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட சிறார்களின் பெற்றோர்களும், தன்னார்வ அமைப்பினரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதபோதகர்களின் காம இச்சைக்கு, ஆயிரக்கணக்கான சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|