யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
கண்காணிப்பு ஒப்பந்தம்: ஐஏஇஏவிடம் மேனன் விளக்கம்
வியன்னா (ஏஜென்சி), 19 ஜூலை 2008   ( 12:21 IST )
சர்வதேச அணுசக்தி முகமை கவர்னர்களிடம், இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கண்காணிப்பு ஒப்பந்தம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் விளக்கினார்.

இந்திய-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, சர்வதேச அணுசக்தி முகமையின் உறுப்பினர்கள் (ஐஏஇஏ கவர்னர்கள்) குழுவினர் அடுத்தமாதத்தில் கூடி முடிவெடுக்க உள்ளனர்.

அதற்கு முன்னதாக, இந்த ஒப்பந்தம் குறித்த சில விஷயங்களை ஐஏஇஏ கவர்னர்களிடம் இந்தியா தெளிவுப்படுத்த வேண்டியதிருந்தது.

இதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் தலைமையிலான குழுவினர் வியன்னா வந்தனர்.

ஐஏஇஏ அலுவலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தில் அணுசக்தி கண்காணிப்பு ஒப்பந்தம் குறித்து ஐஏஇஏ கவர்னர்களிடம் சிவசங்கர் மேனன் விளக்கினர். இந்த கூட்டத்தில் அணுசக்தி தொழில்நுட்பக் குழு (என்.எஸ்.ஜி) நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தின்போது, ஐஏஇஏவின் கண்காணிப்பு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து கவர்னர்கள் கேள்வி எழுப்பியதாகவும், இவற்றுக்கு மேனன் உரிய விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது, அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத நாடாக இருந்தாலும், இந்தியா அணு ஆயுதபரவல் தடுப்பில் ஆற்றிலுள்ள பங்கு பற்றி மேனன் விளக்கியுள்ளார்.

இந்த கண்காணிப்பு வரைவிற்கு ஐஏஇஏ ஒப்புதல் அளித்தால், அது இந்தியாவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் மேலும் ஒரு முன்னேற்றமாக அமையும்.

இதன் பின்னரே, இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை மேற்கொள்வது குறித்து அணுசக்தி தொழில்நுட்பக் குழு (என்.எஸ்.ஜி) முடிவு செய்யும்.

ஐஏஇஏவில் மொத்தம் 140 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் கவர்னர்களாக இருக்கும் 35 பேரில், 19 பேர் அணுசக்தி தொழில்நுட்ப வணிகக் குழுவிலும் (என்.எஸ்.ஜி) இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர மேலும் 19 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, ஐஏஇஏயின் தலைவர் எல் பராடீயையும் சந்தித்து அணுசக்தி கண்காணிப்பு ஒப்பந்தம் குறித்து சிவசங்கர் மேனன் விளக்கியுள்ளார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நேபாளம் : பேருந்து விபத்தில் 14 பேர் பலி
ஜப்பானில் நிலநடுக்கம் ; சுனாமி எச்சரிக்கை
ஐஏஇஏ தலைவரை சந்திக்கிறார் வில்லியம் பர்ன்ஸ்
ஒபாமாவை ஆதரித்து கிளிண்டன் பிரச்சாரம்!
இலங்கை மோதல்: 27 பேர் பலி
பாக்: முஷாரப் செல்வாக்கு சரிந்தது!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...