|
| நேபாளம் : பேருந்து விபத்தில் 14 பேர் பலி |
| காத்மாண்டு(ஏஜென்சி), சனிக்கிழமை, 19 ஜூலை 2008 ( 12:17 IST ) | |
நேபாளத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 14 பேர் பலியானார்கள். பலரை காணவில்லை.
தலைநகர் காத்மாண்டுவிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காரே கோலா என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.
மலைப்பாங்கான சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பேருந்து, திடீரென நிலை தடுமாறி அருகிலுள்ள ஆற்றில் கவிழ்ந்து மூழ்கியது.இதில் 14 பேர் பலியானார்கள்; 29 பேர் காயமடைந்தனர். மேலும் பலரை காணவில்லை.
இது குறித்து தகவலறிந்ததும் நிகழ்விடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|