யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
700 பயணிகளுடன் சென்ற கப்பலில் தீ
ஜகார்த்தா (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2008   ( 17:26 IST )
இந்தோனேஷியாவில் 700 பயணிகளுடன் சென்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான குட்டித் தீவுகளை கொண்ட இந்தோனேஷியாவில் கப்பல் போக்குவரத்துதான் முக்கிய போக்குவரத்தாக உள்ளது. ௦

அளவுக்கு அதிகமான பயணிகள் மற்றும் போதிய பாதுகாப்பு இல்லாதது போன்றவற்றால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில், 706 பயணிகள் மற்றும் 22 ஊழியர்களுடன் சென்ற ஓர் கப்பலில், இன்று நடுவழியில் திடீரென தீப்பிடித்துக் கொண்டதாக செய்தி வெளியானது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் உடனடியாக விரைந்து சென்றனர்.

இதற்கிடையே, தீ விபத்து ஏற்பட்டதும் அந்த கப்பல் அருகேயுள்ள தீவுக்கு சென்று விட்டதாகவும், இதனால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பியிருப்பர் என்று நம்புவதாகவும் ஜகார்த்தா காவல்துறை அதிகாரி சுவார்னோ நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனினும், உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆப்கன்: கடத்தப்பட்ட இந்தியரை மீட்டது ராணுவம்
சீன நிலநடுக்கம் : 4 நாட்களாக சிகரெட்டே உணவு !
கடத்தப்பட்ட பாக் . தூதர் விடுவிக்கப்பட்டார்
பூடான் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் : இந்தியா
சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22,000 ஆனது!
ஜூன் 27 ல் ஜிம்பாப்வே அதிபர் தேர்தல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...