|
| பூடான் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் : இந்தியா |
| திம்பு (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 13:17 IST ) | |
இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பூடான் மாணவர்கள் கற்பதை ஊக்கப்படுத்தும் விதமாக, கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்று நிறுவப்படவுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று அறிவித்தார்.
மக்களாட்சி மலர்ந்துள்ள பூடானில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றுகையில், நேரு - வாங்சுக் கல்வி உதவித் தொகைத் திட்டத்தை இந்தியா நிறுவவுள்ளதாக தெரிவித்தார்.
இதன்மூலம், இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான பூடான் மாணவர்கள் செர்ந்து படிப்பதற்கு வழிவகை செய்யப்படும் என்று அவர் கூறினார்.
கடந்த மார்ச் மாதத்தில் பூடானில் முதன்முறையாக மக்களாட்சி மலர்ந்தது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுக்குப் பிறகு, அந்நாட்டுக்கு முதலாவதாக வருகை புரிந்துள்ள வெளிநாட்டு தலைவர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|