|
| சீன நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 22,000 ஆனது!
|
| பீஜிங் (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 12:24 IST ) | |
சீன நிலநடுக்கத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என்று அஞ்சப்படும் நிலையில், 22 ஆயிரம் பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் சிச்சுயான் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இதில் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறுதியாக 22 ஆயிரத்து 69 பேர் பலியாகியிருப்பதாகவும், 1 லட்சத்து 68 ஆயிரத்து 669 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 4 தினங்களாக மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் 14 ஆயிரம் பேர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, இரு தினங்களுக்கு முன்பு 5.9 ரிக்டர் அளவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சாலைகள் பெருமளவில் சேதமடைந்தன. ஏராளமான வாகனங்கள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன.
கடந்த 1976 ஆண்டு சீனாவில் நடந்த மிக மோசமான நிலநடுக்கத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|