|
| கொழும்பில் தற்கொலைத் தாக்குதல்: போலீசார் உள்பட 9 பேர் பலி |
| கொழும்பு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008 ( 16:15 IST ) | |
இலங்கைத் தலைநகர் கொழும்பில் காவல்துறையினரை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 7 காவல்துறையினர் உள்பட 9 பேர் பலியாயின; 85 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொழும்பு லேக்ஹவுஸ் அருகே வான்படையினரின் சோதனை நிலையம் அமைந்துள்ள பகுதியில் இன்று பிற்பகல் 12.05 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காவல்துறையினரை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது முச்சக்கர வாகனத்தால் மோதப்பட்டு இந்த குண்டுவெடிப்பு நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் காயமடைந்த 85 பேர், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கூறுகையில், இது விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலே என்று குற்றம்சாட்டினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|