|
| நவாஸ் ஷெரீப் வேட்பு மனு ஏற்பு |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008 ( 13:34 IST ) | |
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தாக்கல் செய்த வேட்பு மனுவை அந்நாட்டு தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
வருகிற ஜூன் 18 ம் தேதியன்று நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மேற்கூறிய இருவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் நவாஸ் லாகூர் மற்றும் ராவல்பிண்டி ஆகிய தொகுதிகளிலும், அவரது சகோதரர் ஷபாஸ் ஷரீப் லாகூரின் மற்றொரு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் தாக்கல் செய்த வேட்புமனுக்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது.
நவாஸ் மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக நிலுவையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது இவர்கள் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுக்களை தேர்தல் ஆணையம் அப்போது நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக இவர்களது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|