|
| மே 20-ல் இந்திய-பாக். பிரச்சனைகளுக்குத் தீர்வு : ஷெரீப் விருப்பம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008 ( 12:59 IST ) | |
இம்மாதம் 20-ம் தேதியன்று இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயுள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி, தி டெய்லி டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது.
அதில், இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொண்டு, அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துக்கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும், விசா வழங்குவதிலுள்ள கெடுபிடிகள் போன்றவை முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவுடன் நல்லுறவை வலுப்படுத்துவதற்கு தாங்கள் உறுதிபூண்டுள்ளதாக குறிபிட்ட அவர், அதற்கான கதவுகள் மீண்டும் திறந்திருக்கும் வகையில் அமைந்துள்ள எதிர்வரும் கூட்டத்தை தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக, முஷாரப்பால் நீக்கப்பட்ட நீதிபதிகளை மீண்டும் நியமிக்க வேண்டும் என்ற ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் -நவாஸ் கட்சி கோரிக்கையை, அக்கட்சியின் ஆதரவுடன் ஆட்சியிலுள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி நிராகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|