யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஹனீப் மீதான வழக்கு பலவீனமானது!
மெல்போர்ன் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008   ( 12:09 IST )
ண்டன் விமான நிலையம் தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹனீப் மீதான வழக்கு பலவீனமாக இருப்பதாக ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு லண்டன் கிளாஸ்கோ விமான நிலையத்தில், எரியும் ஜீப்பில் சென்று தாக்குதல் நடத்த முயன்ற பெங்களூர் இன்ஜினியர் கபீல் அகமது உடல்கருகி பலியானார்.

இதில் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட அவரது சகோதரர் டாக்டர் சபீல் முகமது, சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். கடந்தவாரம் அவர் பெங்களூர் திரும்பினார்.

இந்த வழக்கில் சபீல் அகமதுவின் உறவுமுறை சகோதரரான ஆஸ்திரேலிய டாக்டர் முகமது ஹனீப் சந்தேகத்தின் பேரில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் விடுக்கப்பட்டார்.

இந்நிலையில், ஹனீப் மீதான வழக்கு பலவீனமாக இருப்பதாக அந்நாட்டு உளவுத்துறை ஏ‌ற்கனவே கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தகவல் சுதந்திர சட்டங்களின்படி வெளியிடப்பட்ட ஹனீப் வழக்கு ஆவணங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.

ஹனீப் மீதான குற்ற‌ச்சாட்டு பயங்கரமானது என்றாலும், ஹனீப்புக்கு விடுதலை கிடைத்துவிடும் என்று போலீசாரே எதிர்பார்த்ததாக பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜெய்ப்பூர் சம்பவத்தில் 'ஹ்யுஜி'க்கு தொடர்பு: வங்கதேசம் விளக்கம்
உணவு விலை உயர்வுக்கு உயிரி எரிபொருள் காரணமல்ல: யு.எஸ்.
சரப்ஜித் சிங் விடுதலையாவதில் மீண்டும் சிக்கல்
மலேசியா : 'ஹின்ட்ராப்' தலைவர்களை விடுவிக்க மறுப்பு
தைவானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
வங்கதேசத்தில் ரயில்கள் மோதல் : 8 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...