யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
உணவு விலை உயர்வுக்கு உயிரி எரிபொருள் காரணமல்ல: யு.எஸ்.
வாஷிங்டன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 15 மே 2008   ( 11:40 IST )
உணவுப் பொருள் விலை உயர்வுக்கு, உயிரி (பயோ) எரிபொருளின் தயாரிப்பு குறைந்த அளவிலேயே பங்களிப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் அமெரிக்க அரசின் பொருளாதார ஆலோசகர் கவுன்சிலின் தலைவர் எட்வர்ட் லாசியர் கூறுகையில், 'உணவுப் பற்றாக்குறைக்கான காரணத்துக்கு, உயிரி எரிபொருள் தயாரிப்பு, ஒரு சிறிய பகுதியாகவே உள்ளது' என்று தெரிவித்தார்.

மேலும, பெரும்பாலும் சோளத்தை பயன்படுத்தி எத்தனால் தயாரிக்கப்பதை அதிகரிப்பதால், எரிபொருளுக்காக வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டிய நிலை சற்று குறைக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு, உயிரி எரிபொருள் முக்கிய காரணமாக இருக்கிறது என்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர்களும், விஞ்ஞானிகளும் கூறிவருகின்றனர்.

'உயிரி எரிபொருள் தயாரிக்கப்படுவதால், சோளம் மட்டுமின்றி ஏனைய தானிய வகைகள், இறைச்சிகள், பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது' என கடந்த மாதத்தின் சர்வதேச நிதியம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரி எரிபொருளை மிகுதியாக தயாரித்து வரும் அமெரிக்கா, உணவுப் பொருட்கள் விலை உயர்வுக்கு உயிரி எரிபொருள் ஒரு முக்கிய காரணமே கிடையாது என்று கூறியிருப்பது கவனத்துக்குரியது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
சரப்ஜித் சிங் விடுதலையாவதில் மீண்டும் சிக்கல்
மலேசியா : 'ஹின்ட்ராப்' தலைவர்களை விடுவிக்க மறுப்பு
தைவானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
வங்கதேசத்தில் ரயில்கள் மோதல் : 8 பேர் பலி
மேற்கு வெர்ஜினாவில் ஹிலாரி வெற்றி
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு : பிரிட்டன், கனடா கண்டனம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...