யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சரப்ஜித் சிங் விடுதலையாவதில் மீண்டும் சிக்கல்
இஸ்லாமாபாத்(ஏஜென்சி), புதன்கிழமை, 14 மே 2008   ( 16:28 IST )
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியரான ரப்ஜித் சிங் விடுதலையாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசு தரப்பில் சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவதை அந்நாட்டு அரசு ஒத்திவைத்துள்ளது.

இந்நிலையில், சரப்ஜித் சிங்கின் மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து, அவர் ஏற்கனவே 18 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் விடுதலை செய்யும் என கூறப்பட்டது.

அதற்கேற்ப பாகிஸ்தானில் தற்போது புதிதாக பதவியேற்றுள்ள அரசு, அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனையையும் , ஆயுள் தண்டனையாக குறைக்க பரிந்துரைக்க முடிவு செய்தது.இதனால் சரப்ஜித் சிங் விடுதலையாதற்கான வாய்ப்பு பிரகாசமானது.

இந்நிலையில், தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் திட்டம் குறித்து பாகிஸ்தான் அரசின் உயர்மட்ட குழு நேற்று கூடி ஆலோசித்தது.

இக்கூட்டத்தில் உள்துறை, வெளிவிவகாரத் துறை, சட்ட மற்றும் மனித உரிமைத் துறை அமைச்சக மூத்த அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது தூக்கு தண்டனை கைதிகளின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இது போன்ற ஒரு நடவடிக்கை பாகிஸ்தான் கொள்கைக்கு எதிரானது என்றும், இதை அனுமதித்தால் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகரித்துவிடும் என்றும் அவர்கள் கூறியதாகவும் இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இத்தகைய நடவடிக்கை மக்களிடையே எதிர்ப்பை ஏற்படுத்தி, நாட்டில் கொந்தளிப்பான சூழலை உருவாக்கிவிடும் என்றும் அவர்கள் கூறியதாக அந்த பத்திரிகை மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக சரப்ஜித் சிங் விடுதலையாவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மலேசியா : 'ஹின்ட்ராப்' தலைவர்களை விடுவிக்க மறுப்பு
தைவானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
வங்கதேசத்தில் ரயில்கள் மோதல் : 8 பேர் பலி
மெற்கு வெர்ஜினாவில் ஹிலாரி வெற்றி
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு : பிரிட்டன், கனடா கண்டனம்
நவாஸ் கட்சி அமைச்சர்கள் ராஜினாமா : பாக். அரசுக்கு நெருக்கடி
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...