|
| மேற்கு வெர்ஜினாவில் ஹிலாரி வெற்றி |
| வாஷிங்டன் (ஏஜென்சி), 14 மே 2008 ( 11:26 IST ) | |
அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, மேற்கு வெர்ஜினாவில் நடந்த ஜனநாயக கட்சிக்கான வேட்பாளர் தேர்தலில் ஹிலாரி கிளின்டன் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ஹிலாரி பேசுகையில், வேட்பாளர் தேர்ந்தெடுப்பதற்கான போட்டி இன்னும் முடிவுக்கு வந்துவிடல்லை என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஆயினும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட ஓபாமாவுக்கே வாய்ப்பு பிரகாசமாகவுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
மேற்கு வெர்ஜினாவில், இதுவரை எண்ணப்பட்ட 73 சதவிகித பிரதிநிதிகளின் வாக்குகளில், ஹிலாரி 66 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்; ஒபாமா 27 சதவிகித வாக்குகளையே கைப்பற்றினார்.
தற்போது, 1880 பிரதிநிதிகளின் ஆதரவினை ஒபாமா தன்னகத்தே கொண்டு முன்னிலை வகிக்கிறார்; தொடர்ந்து பின்தங்கியுள்ள ஹிலாரிக்கு 1,718 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக போட்டியிடுவதற்கு, அக்கட்சியைச் சேர்ந்த 2,025 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயக கட்சி வேட்பாளரை உறுதியாக நிர்ணயிக்க, ஒரேகான், மோன்டனா உள்ளிட்ட 5 மாகாணங்கள் மட்டுமே இன்னும் மீதமுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|