|
| நவாஸ் கட்சி அமைச்சர்கள் ராஜினாமா : பாக். அரசுக்கு நெருக்கடி |
| லாகூர்(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 13 மே 2008 ( 18:11 IST ) | |
பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தததையடுத்து, நவாஸ் ஷெரீப் கட்சி அமைச்சர்கள் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகித்த நவாஸ் ஷெரீப் தலைமையிலான பிஎம்எல்( என் ) கட்சியை சேர்ந்த 9 அமைச்சர்களும் இன்று பிரதமர் யூசுப் கிலானிக்கு இல்லத்திற்கு சென்று, அவரிடம் தங்களது ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த அரசு பாதுகாப்பு மற்றும் இதர வசதிகளை நேற்றே வேண்டாம் என கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
நவாஸ் கட்சி அமைச்சர்களது ராஜினாமாவால் , ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இருப்பினும் பிரச்சனைகளின் அடிப்படையில் அரசுக்கு அளித்து வரும் ஆதரவு தொடரும் என நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நவாஸ் கட்சி அமைச்சர்கள் ராஜினாமா கடிதத்தை அளித்தால் அதனை ஏற்க வேண்டாம் என பிரதமர் கிலானியை பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆசிப் அலி சர்தாரி கேட்டுக் கொண்டார்.
இதனால் ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதா இல்லையா என்பது குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|