|
| நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 12,000 தாண்டியது |
| பீஜிங் (ஏஜென்சி), 13 மே 2008 ( 08:58 IST ) | |
சீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மதியம் 12 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் தலைநகர் பீஜிங், ஷாங்காய் மற்றும் பாங்காங் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உணரப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் குலுங்கின.
இந்த பயங்கரமான நிலநடுக்கம், மலைப்பிரதேசமான சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பெய்ச்சுவான் நகரத்தை சின்னாப்பின்னமாக்கியுள்ளது.
சுமார் 7 நிமிடங்கள் தொடர்ந்து நீடித்த இந்த நிலநடுக்கத்தால் பெய்ச்சுவான் நகரிலுள்ள குடியிருப்பு பகுதிகள், கட்டடங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளிகள் அனைத்தும் தரைமட்டமாகிவிட்டன. இந்த பகுதியில் மட்டும் சுமார் 12 ஆயிரம் பேர் பலியாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்.
சாங்கிங் என்ற இடத்தில் உள்ள 3 மாடி கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் சுமார் 900 பள்ளிக் குழந்தைகள் உயிரோடு புதைந்துவிட்டனர். இதில் 50 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர். இதனால் நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக இடிபாடுகளில் சிக்கி கிடப்பவர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கும்படி அதிபர் ஹியூ ஜின்டாவோ உத்தரவிட்டுள்ளார். தற்போது அந்நாட்டு ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதை சீன அதிபர் வென்ஜியோபோ நேரில் பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்பட்டுள்ள மிக மோசமான நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. நேற்றைய நிலநடுக்கத்துக்கு பிறகு, தொடர்ந்து 44 முறை மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|