|
| சீனாவில் கடும் நிலநடுக்கம் : பலி 3,000 |
| பீஜிங் (ஏஜென்சி), 12 மே 2008 ( 17:34 IST ) | |
சீனாவில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக பள்ளிக்கட்டம் இடிந்து விழுந்ததில் , இடிபாடுகளில் சிக்கி 900 குழந்தைகள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிற நிலையில், இந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 3,000 த்தை தாண்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இன்று காலை இந்த நில நடுக்கம் ஏற்பட்டது.அம்மாகாணத்தின் தலைநகரான செங்க்டுவிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்டுவின் வட மேற்கு பகுதியில் 92 கிலோ மீட்டர் தொலைவுக்கு இந்த் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், ரிக்டர் அளவில் 7.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கம் சீன தலைநகர் பீஜிங் மற்றும் ஷாங்காய், பாங்காங் ஆகிய நகரங்களிலும் உணரப்பட்டதாகவும், கட்டடங்கள் மற்றும் வீடுகள் குலுங்கியதாகவும் அப்பகுதி மக்கள தெரிவித்தனர்.
இந்நிலையில் , இந்த நிலநடுக்கத்தால் பல குடியிருப்பு பகுதிகள் மற்றும் கட்டங்கள் இடிந்து விழுந்ததில் சுமார் 107 பேர் வரை பலியாகி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிச்சுவான் மாகாணத்தின் அருகே உள்ள சாங்கிங் என்ற இடத்தில் உள்ள நகராட்சியில் உள்ள இரண்டு ஆரம்ப பள்ளி கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் அப்பள்ளி வகுப்பறைகளில் அமர்ந்திருந்த சுமார் 900 குழந்தைகள் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகவும், அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் சீன அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இதர இடங்களில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,000 முதல் 5,000 வரை இருக்கலாம் என மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
இடிபாடுகளில் சிக்கி கிடப்பவர்களை மீட்கும் முயற்சிகளில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்:
அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்... |
| |
|
|
|
|
 | | WD |
| | | சந்தோஷ் சுப்பிரமணியம் | | ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|