|
| விடுதலைப்புலிகளால் இலங்கை ஆயுத கப்பல் மூழ்கடிப்பு |
| கொழும்பு (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008 ( 12:50 IST ) | |
திருகோணமலை துறைமுகத்தில் இலங்கை கப்பற்படையின் கார்கோ (ஆயுத போக்குவரத்துக்கு பயன்படுத்தும்) கப்பல் ஒன்றை விடுதலைப் புலிகள் இன்று தாக்குதல் நடத்தி மூழ்கடித்தனர்.
நீருக்கடியிலிருந்து வெடிகுண்டுத் தாக்குதல் மூலம், 65 மீட்டர் (213) உயர நீளம் கொண்ட இக்கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாகவும், ஆயினும் உயிர் சேத்ம்௦ ஏதும் ஏற்படவில்லை என்றும் இலங்கை கப்பற்படை தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை படையினரையும், ஆயுதங்களையும் ஏற்றிச் செல்லக்கூடிய ஏ-520 கப்பல் இன்று அதிகாலை 2:23 மணியளவில் தாக்கியழிக்கப்பட்டுள்ளது என்றும், கொழும்பில் இருந்து காங்கேசன் துறைமுகத்துக்கும், காங்கேசன் துறைமுகத்தில் இருந்து கொழும்புக்கும் இலங்கை படையினரையும், ஆயுதங்கள், மற்றும் வெடிபொருட்களையும் ஏற்றி - இறக்கும் பணியில் இக்கப்பல் ஈடுபட்டு வந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2007-ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கப்பல்களை தாக்கியழிக்கும் முழுமையான பணியிலும் இக்கப்பல் ஈடுபட்டிருந்தது என்று விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|