|
| புஷ் கருத்தை நேர்மறையுடன் அணுக வேண்டும் : அமெரிக்கா |
| வாஷிங்டன் (ஏஜேன்சி), சனிக்கிழமை, 10 மே 2008 ( 12:02 IST ) | |
இந்தியர்கள் அதிக 'கலோரி' அளவு கொண்ட உணவுகளை உட்கொள்வதே, உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறிய அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் காண்ட்லிசா ரைஸின் கருத்தை, இந்தியா நேர்மறையான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மெக்கார்மக் கூறுகையில், "இந்த கருத்துக்களின் பிரதிபலிப்பை பத்திரிகை செய்திகளின் வாயிலாக அறிந்துகொண்டேன். எந்த ஒரு தனிப்பட்ட அரசையும் விமர்சிப்பதை, அமெரிககாவில் எவரும் விமர்சிக்கவில்லை. அத்தகைய நடவடிக்கை உகந்தது ஆகாது. உலக மக்களிடையே கலோரி நிறைந்த உணவுகள் உட்கொள்ளும் நிலை உயர்ந்திருப்பது சாதகமான சூழலே" என்றார்.
உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது என்ற அவர், "இந்தியாவோ, சீனாவோ அல்லது உலகின் வேறு சில நாடுகளிலோ வெவ்வேறான வாழ்க்கைத் தரம் உண்டாவது, சர்வதேச நடைமுறைக்கு உகந்த ஒன்று" என்று கூறினார். இந்தியாவில் சுமார் 350 மில்லியன் லட்சம் நடுத்தர வர்க்க மக்கள் உள்ளதாகவும், இவர்களது அபரிதமான பொருளாதார வளர்ச்சிதான் உணவு பொருட்களின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகவும் புஷ் கூறியிருந்தார்.
மேலும், இந்த நடுத்தர வர்க்கத்தினர் நல்ல சத்தான உணவுப் பொருட்களையும் நாடத்துவங்கியதுதான் உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்றும் அவர் கூறியதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|