|
| ஹாஃப்த் - 8 ஏவுகணையை சோதனை செய்தது பாக். |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 13:30 IST ) | |
அணு மற்றும் வழக்கமான ஆயுதத்தை ஏந்திச் சென்று வான்வழியாக தாக்குதல் நடத்த வல்ல, ஹாஃப்த் - 8 ஏவுகணையை பாகிஸ்தான் இன்று சோதனை செய்தது.
அக்னி -3 ஏவுகணையை இந்தியா சோதனை செய்த மறுநாளிலேயே, பாகிஸ்தான் ஏவுகணை சோதனை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹாஃப்த் - 8 அல்லது ராட் (ராட் என்றால், அரேபிய மொழியில் 'இடி' என்று பொருள்) என்றழைக்கப்படும் இந்த ஏவுகணை, 350 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நிலப்பரப்பு அல்லது கடல் பரப்பின் எல்லையை குறிவைத்துத் தாக்கக்கூடியது என்று பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்ட இடம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இந்தச் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களுக்கு, அதிபர் முஷாரப் மற்றும் பிரதமர் யூசுப் ராஸா கிலானி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|