யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
நர்கீஸ் புயல்: பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும்
யாங்கூன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008   ( 13:15 IST )
மியான்மரில் நர்கீஸ் புயலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் அருகே மையம் கொண்டிருந்த நர்கீஸ் புயல், கடந்தவாரம் திசை மாறி மியான்மருக்கு நகர்ந்தது. மணிக்கு 190 கி.மீ. வேகத்தில் கடந்த சனிக்கிழமை மியான்மரை தாக்கிய இந்த புயலில் சிக்கி தலைநகர் யாங்கூன் மற்றும் அருகேயுள்ள தீவுகள் ஆகியவை சின்னப்பின்னமானது.

நர்கீஸ் புயலின் இந்த கோர தாண்டவத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இறுதியாக 80 ஆயிரம் பேர் பலியாகியிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், பலியானோர் எண்ணிககை 1 லட்சத்தை தாண்டும் என்று அங்கு முகாமிட்டுள்ள அமெரிக்க தூதர் ஒருவர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பல்வேறு நாடுகளும் மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றன. யாங்கூன் விமான நிலையத்தில் பிற நாடுகளிலிருந்து நிவாரணப் பொருட்களுடன் விமானங்கள் வந்து இறங்கிய வண்ணம் உள்ளன.

இந்தியா சார்பில் அனுப்பப்பட்ட உணவு, மருந்து மற்றும் நிவாரணப் பொருட்கள் தலைநகர் யாங்கூனை வந்தடைந்தன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்திய மாணவி பிரிட்டனில் கொலை: ஒருவர் கைது
இலங்கை :பிரபாகரனுக்கு ராஜபக்சே சவால்
ரஷ்ய அதிபராக பதவியேற்றார் மெத்வதேவ் !
லண்டன்: விடுதலைப் புலிகள் ஆதரவு தலைவர் சாந்தன் கைது
இலங்கை பாராளுமன்றம் திடீர் முடக்கம்
ஈராக்கிலிருந்து 3,500 வீரர்கள் வாபஸ்: அமெரிக்கா முடிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace