|
| இந்திய மாணவி பிரிட்டனில் கொலை: ஒருவர் கைது |
| லண்டன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 10:22 IST ) | |
இந்திய மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம் விஜயவாடா, லம்பாடிப்பேட்டையை சேர்ந்தவர் ஜோதிர்மயி. இவர் பிரிட்டனின் பிர்மிங்ஹாமில் உள்ள உல்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். படித்து வந்தார். இவர் அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு, ஜோதிர்மயி தனது அறையில் பிணமாக கிடந்தார். அவரது தலையில் பலத்த காயம் இருந்தது.
அவருக்கு அருகே மற்றொரு இளைஞரும் மயக்க நிலையில் கிடந்தார். அவரும் இந்தியர் என தெரிகிறது. தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று, அந்த இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மயக்க நிலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதற்கிடையே, ஜோதிர்மயியின் உடல் நேற்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், அவர் தலையில் ஏற்பட்ட காயத்தால் உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில் பிர்மிங்ஹாம் பகுதியில் இந்தியர் ஒருவர் கொலை செய்யப்படுவது இது இரண்டாவது முறை.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|