|
| இலங்கை :பிரபாகரனுக்கு ராஜபக்சே சவால் |
| கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 8 மே 2008 ( 09:48 IST ) | |
"துணிச்சல் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோதிப்பார்க்க தயாரா?" என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே சவால் விடுத்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. சமீபகாலமாக நடந்து வரும் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் கையே ஓங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை கிழக்கு மாகாண கவுன்சில் தேர்தல் வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கிழக்கு அம்பாறை மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு ராஜபக்சே பேசியதாவது:
விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் பலியாகி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுக்கு, துணிச்சல் இருந்தால் என்னுடன் நேருக்கு நேர் மோத தயாரா என்று சவால் விடுகிறேன்.
பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து அப்பாவி மக்களை விடுவித்து அமைதியை ஏற்படுத்தும் முயற்சி தொடரும். இதிலிருந்து அரசு ஒருபோதும் பின்வாங்காது.
புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து கிழக்கு பகுதி விடுவிக்கப்பட்டதுபோல், வடக்கு பகுதி மக்களும் விரைவில் விடுபடுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
இலங்கை அதிபர் ராஜபக்சே, மல்யுத்த வீரராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|