|
| ரஷ்ய அதிபராக பதவியேற்றார் மெத்வதேவ் ! |
| மாஸ்கோ(ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008 ( 17:50 IST ) | |
ரஷ்ய அதிபராக டிமிட்ரி மெத்வதேவ் இன்று பதவியேற்றார்.
கிரெம்ளினில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூ ஹாலில் பதவியேற்பு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.
ரஷ்ய அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதவியிலிருந்து ஓய்வு பெறும் விலாடிமிர் புடினின் ஆதரவு பெற்ற மெத்வதேவ் வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று அவர் பதவியேற்றார்.
பதவியேற்பின்போது, அதிபர் பதவிக்கான அதிகாரம், அதிபருக்கான கொடி, ரஷ்ய அரசியல் சாசனச் சட்டத்தின் பிரதி உள்ளிட்டவற்றை மெத்வதேவ் பெற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இன்று புதிய அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட மெத்வதேவ், அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற புடினை பிரதமராக நியமித்து, அதற்கு அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் கோருவதாக கேட்டுக் கொண்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|