|
| லண்டன்: விடுதலைப் புலிகள் ஆதரவு தலைவர் சாந்தன் கைது |
| லண்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008 ( 13:08 IST ) | |
விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவு தலைரான சாந்தனை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.
லண்டனில் வசித்து வருபவர் அருணாச்சலம் கிரிசாந்தக்குமார் என்ற சாந்தன். இவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரிட்டனில் செயல்பட்டு வருவதாகவும், அந்த அமைப்புக்காக நிதி திரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சாந்தன் உள்ளிட்ட 3 பேரை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 29ம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராக இருந்த ஆண்டன் பாலசிங்கத்துக்கு நெருக்கமாக இருந்தவர் சாந்தன். இவர், கடந்த 2006ல் ஜெனீவாவில் நடந்த அமைதிப்பேச்சு வார்த்தையிலும் கலந்து கொண்டார்.
பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டியதாக, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் சாந்தன் கைது செய்யப்பட்டார். பின்னர் நவம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாந்தன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|