யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
ஈராக்கிலிருந்து 3,500 வீரர்கள் வாபஸ்: அமெரிக்கா முடிவு
பாக்தாத் (ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008   ( 12:15 IST )
ஈராக்கிலிருந்து 3 ஆயிரத்து 500 வீரர்களை வாபஸ் பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

ஈராக் மீது கடந்த 2003 ஆண்டு போர் தொடுத்த அமெரிக்கா, அந்நாட்டின் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் ஆட்சிக்கு முடிவு கட்டியது. தற்போது அங்கு அமெரிக்கா ஆதரவு பெற்ற புதிய அரசு அமைந்துள்ளது.

எனினும், தீவிரவாதிகளை சமாளிப்பதற்காக அமெரிக்க ராணுவம் மற்றும் கூட்டுப்படைகள் ஈராக்கில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது 1 லட்சத்து 56 ஆயிரம் அமெரிக்க வீரர்களும், 10 ஆயிரம் அமெரிக்க கூட்டுப்படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதில், 30 ஆயிரம் அமெரிக்க வீரர்களை வாபஸ் பெற்றுகொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இதன் முதல் கட்டமாக 3 ஆயிரத்து 500 வீரர்கள், இன்னும் சில வாரங்களுக்குள் ஜார்ஜியா படை தளத்துக்கு திரும்பவுள்ளனர்.

வரும் ஜூலை மாதத்துக்குள் 30 ஆயிரம் வீரர்களும் அமெரிக்கா திரும்பிவிடுவார்கள் என்று பென்டகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அதிபர் வேட்பாளர் போட்டி: வட கரோலினாவில் ஒபாமா வெற்றி
தீவிரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் : நிருபமாசென்
நர்கீஸ் புயல்: பலி எண்ணிக்கை 23,000 ஆனது
தலாய் லாமா தூதர்களுடன் 2வது சுற்று பேச்சு : சீனா சம்மதம்
விடுதலைப் புலிகளுக்கு 3 கப்பல்களில் ஆயுதங்கள்
பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 2 பேர் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace