யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
அதிபர் வேட்பாளர் போட்டி: வட கரோலினாவில் ஒபாமா வெற்றி
வாஷிங்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008   ( 11:55 IST )
அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்காக, வட கரோலினாவில் நடந்த ஜனநாயக கட்சிக்கான வேட்பாளர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றார்.

இதன்மூலம், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட அவருக்கான வாய்ப்பு பிரகாசமாகவுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

வட கரோலினா மாகாணத்தில், 56 சதவிகித பிரதிநிதிகளின் ஆதரவை பெற்று ஹிலாரி கிளின்டனை தோற்கடித்தார் ஒபாமா.

இதனிடையே, மற்றொரு முக்கிய மாகாணமான இண்டியானாவில் இன்னும் 8 சதவிகித வாக்குகளின் முடிவுகள் மீதமுள்ள நிலையில், ஹிலாரி 51 சதவிகித ஆதரவையும், ஒபாமா 49 சதவிகித ஆதரவையும் பெற்றுள்ளனர்.

இதுவரை, 1815 பிரதிநிதிகளின் ஆதரவினை ஒபாமா தன்னகத்தே கொண்டுள்ளார்; அவரைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் பின்தங்கியுள்ள ஹிலாரிக்கு 1,672 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது.

இதில், சூப்பர் டெலிகேட்ஸ் என அழைக்கப்படும் கட்சியின் மூத்தத் தலைவர்களின் ஆதரவு, ஹிலாரிக்கு ஓரளவு கூடுதலாகவே உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளாராக போட்டியிடுவதற்கு, அக்கட்சியைச் சேர்ந்த 2,025 பிரதிநிதிகளின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக கட்சி வேட்பாளரை நிர்ணயிக்க, மேற்கு வெர்ஜினா, ஒரேகான், மோன்டனா உள்ளிட்ட 6 மாகாணங்கள் மட்டுமே இன்னும் மீதமுள்ளன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தீவிரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் : நிருபமாசென்
நர்கீஸ் புயல்: பலி எண்ணிக்கை 23,000 ஆனது
தலாய் லாமா தூதர்களுடன் 2வது சுற்று பேச்சு : சீனா சம்மதம்
விடுதலைப் புலிகளுக்கு 3 கப்பல்களில் ஆயுதங்கள்
பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 2 பேர் பலி
தென்னாப்பிரிக்காவில் ஐயப்ப கோவில்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace