|
| தீவிரவாதத்தை ஒழிக்க ஒத்துழைக்க வேண்டும் : நிருபமாசென் |
| நியூயார்க் (ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008 ( 11:33 IST ) | |
பெருகி வரும் தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஐ.நா. சபைக்கான இந்திய தூதர் நிருபமா சென் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலில் 'சர்வதேச அமைதிக்கு ஊறு விளைவிக்கும் தீவிரவாதம்' பற்றிய கருத்தரங்கு நடைபெற்றது. இதில் நிருபமா சென் பங்கேற்று பேசியதாவது:
பெருகிவரும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தீவிரவாதிகளின் ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களும், பணமும் கிடைக்கும் வழிகளை முதலில் தடுக்க வேண்டும். அவர்கள் பதுங்கியுள்ள இடம் மற்றும் போக்குவரத்து போன்றவற்றை முடக்க வேண்டும்.
இதுபோன்ற சில அடிப்படை விஷயங்களை கட்டுப்படுத்தினாலே தீவிரவாத நடவடிக்கைகளை விரைவில் ஒடுக்கிவிடலாம். இந்த விஷயத்தில் சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தீவிரவாதத்தை ஒழிக்க சர்வதேச அளவில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு இந்தியா முழு ஆதரவளிக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|