யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
நர்கீஸ் புயல்: பலி எண்ணிக்கை 23,000 ஆனது
மியான்மர் (ஏஜென்சி), புதன்கிழமை, 7 மே 2008   ( 09:16 IST )
மியான்மரை சின்னாப் பின்னமாக்கிய நர்கீஸ் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 23 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

கடந்த வார இறுதியில் நர்கீஸ் என்ற புயல் மியான்மர் நாட்டை தாக்கியது. இதில் வீடுகள், கட்டடங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை அடியோடு சரிந்தன. பலத்த சேதம் ஏற்பட்டது.

இந்த இயற்கை பேரழிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

400ல் ஆரம்பித்த பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக மாறி, பின்னர் 15 ஆயிரமாக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து தற்போது 23 ஆயிரத்தை தொட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதவிர, புயலில் சிக்கிய 40 ஆயிரம் பேர் மாயமாகிவிட்டனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துந்துள்ளனர்.

இந்த புயல் ஏற்படுத்திய சேதத்தால் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டுக்கு பல்வேறு நாடுகளும் நிதியுதவி மற்றும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றன.

இரண்டு கப்பல்களில் இந்தியா அனுப்பிவைத்த உணவு, உடை மற்றும் மருந்துப் பொருட்கள் இன்று மியான்மரை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
தலாய் லாமா தூதர்களுடன் 2வது சுற்று பேச்சு : சீனா சம்மதம்
விடுதலைப் புலிகளுக்கு 3 கப்பல்களில் ஆயுதங்கள்
பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 2 பேர் பலி
தென்னாப்பிரிக்காவில் ஐயப்ப கோவில்
எண்ணெய் விலை உயர்வுக்கும் இந்தியாதான் காரணமாம்
நர்கீஸ் புயல்: பலி எண்ணிக்கை 15,000 ஆனது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace