|
| 'இந்தியாவின் பெருமை' விருதைப் பெற்றார் லார்ட் கலித் ஹமீத் |
| லண்டன் (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2008 ( 14:14 IST ) | |
மருத்துவத்துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக இந்திய வம்சாவளியான லார்ட் கலித் ஹாமீதுக்கு 2007-ம் ஆண்டுக்கான 'இந்தியாவின் பெருமை' (பிரைட் ஆஃப் இந்தியா) விருது வழங்கப்பட்டது.
இதையொட்டி இந்திய சர்வதேச கூட்டணி சார்பில் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில், லார்ட் கலீத் ஹமீதுக்கு இந்தியத் தூதர் (பொறுப்பு) அசோக் முகர்ஜி விருது வழங்கி சிறப்பித்தார்.
லார்ட் ஹமீத், ஆல்ஃபா மருத்துவமனையின் தலைவரும், கிராம்வெல் மருத்துவமனையின் முன்னாள் தலைமை நிர்வாகியுமாவார்.
இவருடன், வெளிநாடு வாழ் இந்திய தொழில் நெறிஞரான ராமி ராஞ்சர், தலைமை கண்காணிப்பாளர் பார்ம் சாந்து மற்றும் கலைத்துறைக்கு சிறப்பாக பங்காற்றியது நடிகை ஆயிஷா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வெளிநாடு வாழ் இந்தியரும் தொழிலதிபருமான லார்ட் ஸ்வராஜ் பால், லார்ட் நவ்நீத் தொலாக்கியா, லார்ட் முகமது ஷேக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|