|
| உணவு பொருள் பற்றாக்குறை : ஐ.நா.விரைவில் ஆலோசனை |
| ஐ.நா. (ஏஜென்சி), சனிக்கிழமை, 3 மே 2008 ( 13:07 IST ) | |
உலக அளவில் அதிகரித்து வரும் உணவு பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை குறித்து மிகவும் கவலையடைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான உலக வர்த்தக அமைப்பு , அடுத்த வாரம் ஜெனீவாவில் நடைபெற உள்ள மாநாட்டில் இது குறித்து விவாதிக்க உள்ளது.
இம்மாத கடைசியில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அதிகரித்து வரும் உணவு பொருள் பற்றாக்குறை மற்றும் உணவு பொருட்கள் பயிரிடப்பட்ட நிலங்கள் , உயிரி எரி பொருள்களை உற்பத்தி செய்யும் நிலமாக மாறிவருவதை தடுப்பது குறித்தும் , இந்தியா மற்றும் சீனா போன்ற வளரும் நாடுகள் உணவு பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.
இத்தகவலை தெரிவித்த உலக வர்த்தக அமைப்பின் துணை இயக்குனர் ஹர்ஷ் வர்தன் சிங்,ஏதாவது ஒரு மிகப்பெரிய ஏற்றுமதி நாடு தனது ஏற்றுமதியை குறைத்தாலும், அது இதர வர்த்தக சந்தையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|