|
| பாக்: சரப்ஜித்சிங் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு! |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), 3 மே 2008 ( 09:22 IST ) | |
பாகிஸ்தான் சிறையில் உள்ள சரப்ஜித் சிங்கின் தூக்கு தண்டனையை அந்நாட்டு அரசு நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த 1990ம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த தொடர்குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி, பஞ்சாபை சேர்ந்த சரப்ஜித்சிங்கை அந்நாட்டு அரசு கைது செய்தது. சரப்ஜித் தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால், அவர் மீது இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டது.
இதுதொடர்பான வழக்கில் சரப்ஜித்சிங்குக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.
சரப்ஜித் சிங் சார்பில் அனுப்பப்பட்ட கருணை மனுவை அதிபர் முஷரப்பும் நிராகரித்துவிட்டார். இதைதொடர்ந்து, கடந்த ஏப்ரல் 1ம் தேதி சரப்ஜித் சிங்குக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது.
பின்னர், இந்தியாவின் கோரிக்கையை ஏற்று ஏப்ரல் 30ம் தேதிக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சரப்ஜித்சிங்குக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரி, புதிதாக ஒரு மனுதாக்கல் செய்யப்பட்டது. சரப்ஜித்சிங்கின் உறவினர்களும் லாகூர் சென்று சிறையில் வாடும் சரப்ஜித்சிங்கை சந்தித்து பேசினர்.இதனைத் தொடர்ந்து தண்டண்ை மேலும் 21 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், சரப்ஜித்சிங்கின் மரண தண்டனையை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அரசு திடீரென அறிவித்துள்ளது. மறுஉத்தரவு வரும்வரை இந்த தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் லாகூர் சிறை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சிறை கண்காணிப்பாளர் மாலிக் முபாஷிர் அகமதுகான் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|