|
| பாக்.: ஆளும் கூட்டணியில் பிளவு |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008 ( 17:23 IST ) | |
பாகிஸ்தானில் ஆளும் கூட்டணியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கும் , நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல் - என் கட்சிக்குமிடையே நீதிபதிகள் நியமனம் தொடர்பான பிரச்சனையில் மோதல் ஏற்பட்டுள்ளதால் அக்கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பல்வேறு நீதிபதிகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் , அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தும் பிரச்சனையில் இரு கட்சிகளுக்குமிடையே கருத்து வேறுபாடு நீடிக்கிறது.
இதனால் ஆட்சியமைத்து ஒரு மாத காலமே ஆகியுள்ள மேற்கூறிய கூட்டணி முறிந்துவிடுமோ என்ற அச்சம் இரு கட்சித் தலைவர்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நீதிபதிகள் நியமனம் தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்டுள்ள முட்டுக் கட்டையை நீக்குவதற்காக, தற்போது துபாயில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் ஆசிப் அலி சர்தாரியை சந்தித்துப் பேசுவதற்காக , பிஎம்எல் - என் கட்சித் தலைவர் நவாஸ் ஷெரீப் , அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக நவாஸ் கூறுகையில், இந்த கூட்டணி நீடிக்க வேண்டும் என தாம் மனப்பூர்வமாக விரும்புவதாக தெரிவித்தார்.
ஆனால் கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள நவாஸ் கட்சியின் அமைச்சர் ஒருவர் கூறுகையில் , நீதிபதிகள் நியமனத்தில் முட்டுக்கட்டை நீடிப்பதால் , அமைச்சரவையிலிருந்து நாங்கள் வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|