|
| பிரிட்டனில் குடியேற ஒசாமா மகனுக்கு மறுப்பு |
| லண்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008 ( 15:59 IST ) | |
பிரிட்டனில் குடியேற ஒசமா பின் லேடனின் மகன் ஓமருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பிரிட்டனைச் சேர்ந்த 52 வயது பெண்மணியான சாய்னா அல்சபா என்பவை மணந்தார், 27 வயது நிரம்பிய ஓமர்.
இதைத் தொடர்ந்து, பிரிட்டனிலேயே தனது மனைவியுடன் குடியேறுவது என முடிவு செய்து, விசா பெறுவதற்கு அவர் விண்ணப்பித்தார்.
இந்நிலையில், ஓமருக்கு விசா வழங்க பிரிட்டன் அதிகாரிகள் மறுத்துள்ளதாக, 'தி டைம்ஸ்' இதழில் இன்று செய்தி வெளியாகியுள்ளது.
லண்டனில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பொறுப்பான ஒசாமாவுக்கு தொடர்ந்து விசுவாசியாக ஓமர் இருந்து வருவதற்கான ஆதாரம் தங்களிடம் உள்ளது என்றும், பிரிட்டனில் அவர் குடியேறினால், மக்களின் பாதுகாப்புக்கு ஏற்புடையதாக இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விசா மறுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து முறையீடு செய்துள்ள ஓமர், உறுதியற்ற ஊடக செய்திகளைக் கருத்தில் கொண்டு தனக்கு விசா வழங்க மறுப்பது தவறானது என்று தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சவுதி அரேபியாவில் திருமணம் முடிந்த பிறகு, தற்போது ஓமர் தம்பதியர் எகிப்தில் வசித்து வருகின்றனர். பிரிட்டனில் குடியேறுவதற்காக காத்திருந்த அவருக்கு, விசா வழங்க காய்ரோவிலுள்ள பிரிட்டன் தூதரக அதிகாரி மறுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|