யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
திருமணம் அவசியமில்லாதது : சல்மான் ருஷ்டி
லண்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008   ( 15:58 IST )
திருமணம் என்பது அவசியமானது என்று தாம் கருதவில்லை என நான்கு முறை திருமணம் செய்துகொண்ட அனுபவம் மிகுந்தவரும், சர்ச்சைக்குரிய எழுத்தாளருமான சல்மான் ருஷ்டி கூறியுள்ளார்.

இந்திய வம்சாவளியான அவர், திருமணம் என்ற முறையையே சாடும் விதமாக, அந்த சம்பிரதாயத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், திருமண உடையை அணிவதற்காகவே மட்டுமே பெண்கள் இதில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து 'எல்லி' என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், "நான் நான்கு முறை திருமணம் செய்தேன் என்பதை விட்டுவிடுங்கள். திருமணம் என்பது மிகவும் அவசியமானது என உண்மையில் தாம் நினைக்கவில்லை" என்றார்.

'தி சட்டானிக் வெர்ஸ்' நாவலின் மூலம் இலக்கிய வட்டாரத்தின் கவனத்தை ஈர்த்தவரான ருஷ்டி, அண்மையில் தனது நான்காவது மனைவியான பத்மா லஷ்மியை பிரிந்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாணவர் மீது தாக்குதல்: ஆஸி.யில் இந்தியர்கள் ௦போராட்டம்
பாக்.கை விட்டு கிளம்பியது சரப்ஜித் குடும்பம்
'இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் காலாவாதியாகவில்லை'
திபெத் கலவரம் : 17 பேருக்கு சிறை
'உணவு விலை உயர்வு: யு.எஸ்., ஐரோப்பிய யூனியனே பொறுப்பு'
சரப்ஜித் தூக்குத் தண்டனை மேலும் 21 நாட்களுக்கு தள்ளிவைப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace