யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
மாணவர் மீது தாக்குதல்: ஆஸி.யில் இந்தியர்கள் ௦போராட்டம்
மெல்போர்ன் (ஏஜென்சி), புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008   ( 11:55 IST )
ஆஸ்திரேலியாவில் பகுதிநேர கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இந்திய மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, ஓட்டுநர்கள் பலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவைச் சேர்ந்த 23 வயது மாணவர் நேற்று ஆஸ்திரேலிய பயணி ஒருவரால் தாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, பலத்த காயங்களுட்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மிகுந்த கோபத்துக்கு ஆளான இந்தியாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர்கள் இன்று காலை மெல்போர்னில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தங்களுக்கு நீதி வேண்டும் என்றும், விக்டோரியா காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்திய மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவருக்கு இழப்பீடு தரவேண்டும் என்ற கோரிக்கைகளுடன், இந்தியாவைச் சேர்ந்த கார் ஓட்டுநர்களின் நலனுக்குப் பாதுகாப்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வேண்டுகளை அவர்கள் விடுத்தனர்.

இந்தக் கோரிக்கைகளுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் லின் கோஸ்கியை தாங்கள் சந்தித்துப் பேசுவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நகர் முழுவதும் பேரணி நடத்தவுள்ளதாகவும் இந்திய ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.

இந்திய கார் ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ப்ரீத் சிங் கூறுகையில், ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வருகின்றனர் என்றும், அவர்கள் தொடர்ந்து வன்முறைக்கு ஆளாவது வருத்தத்துக்குரியது என்றும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாக்.கை விட்டு கிளம்பியது சரப்ஜித் குடும்பம்
'இந்தியா - அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் காலாவாதியாகவில்லை'
திபெத் கலவரம் : 17 பேருக்கு சிறை
'உணவு விலை உயர்வு: யு.எஸ்., ஐரோப்பிய யூனியனே பொறுப்பு'
சரப்ஜித் தூக்குத் தண்டனை மேலும் 21 நாட்களுக்கு தள்ளிவைப்பு
சரப்ஜித்திற்கு மன்னிப்பு : முஷாரப்புக்கு வலியுறுத்தல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace