|
| நேபாள அதிபராக பிரசந்தா விருப்பம் |
| காத்மாண்டு(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008 ( 14:04 IST ) | |
நேபாளத்தின் அதிபராக வேண்டும் என தாம் விரும்புவதாக மாவோயிஸ்ட் தலைவர் பிரசந்தா கூறியுள்ளார்.
நேபாளத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய மாவோயிஸ்ட்டுகள் தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது.
இந்த தேர்தலில் மாவோயிஸ்ட் தலைமையிலான கூட்டணிக்கு தலைமை வகித்து வெற்றி தேடி தந்த பிரசந்தான் நேபாள பிரதமராவார் எனக் கூறப்பட்ட நிலையில், அவரோ தனது லட்சியம் நேபாள அதிபராவதுதான் என்றும் , பிரதமராவது இல்லை என்றும் கூறியுள்ளார்.
இடைக்கால அரசியல் சாசனத்தில் அதிபர் பதவி குறித்த எந்த ஒரு அம்சமும் இல்லை என்றபோதிலும், அதிபர் பதவியை ஏற்படுத்துவது குறித்த வழி முறைகளை கண்டறிவது குறித்து ஏழு கட்சிக் கூட்டணி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவு,விரைவில் இதற்கு எளிமையான தீர்வு காணப்படும் என தாம் நம்புவதாகவும் பிரசந்தா மேலும் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|