|
| தமிழ் நாளிதழ் மீதான தடையை நீக்கியது மலேசியா |
| கோலாலம்பூர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008 ( 13:44 IST ) | |
'மக்கள் ஓசை' தமிழ் நாளிதழுக்கு விதிக்கப்பட்ட தடையை மலேசிய அரசு நீக்கியுள்ளது.
மலேசியாவில் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் சம உரிமை கோரி கடந்த ஆண்டின் இறுதியில், தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்தினர்.
பல்வேறு அடக்கு முறைகளை ஏவி, போராட்டக்காரர்களை அரசு கட்டுப்படுத்தியது.
இதுகுறித்து அங்கிருந்து வரும் தமிழ் நாளிதழான 'மக்கள் ஓசை' தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தது. அரசின் நடவடிக்கைக்கு எதிராக அடிக்கடி தலையங்கமும் தீட்டிவந்தது.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்த மலேசிய அரசு, சில வாரங்களுக்கு முன்பு, 'மக்கள் ஓசை' உரிமத்தை ரத்து செய்தது. இதனால் அந்த பத்திரிகை நிறுத்தப்பட்டது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் செய்தி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் எதிரொலியாக 'மக்கள் ஓசை' நாளிதழ் மீதான தடையை மலேசிய அரசு தற்போது நீக்கியுள்ளது.
இதுகுறித்து, மலேசிய உள்துறை அமைச்சர் சையத் ஹமீத் அல்பார் கூறுகையில், "'மக்கள் ஓசை' நாளிதழின் பொறுப்பாசிரியர்கள் அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக உறுதிமொழி அளித்துள்ளனர். இதனால் அந்த பத்திரிகை மீதான தடை நீக்கப்பட்டுள்ளது' என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|