|
| பாக். குண்டுவெடிப்பு: 3 பேர் பலி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி, வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2008 ( 12:37 IST ) | |
பாகிஸ்தானில் காவல் நிலையம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பலியாகினர்; 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான மார்தான் என்ற இடத்தில், காவல் நிலையம் அருகே ஒரு காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு இன்று காலை 6 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் காவல் நிலையத்தில் இருந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் பலியாகினர். 10 போலீசார் உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பில் காவல் நிலையத்தின் மதில் சுவர், அருகேயுள்ள ஓட்டல் சுவர் ஆகியவை சேதமடைந்தன. பல்வேறு கடைகளின் சுவர்களும் இடிந்து விழுந்தன.
பாகிஸ்தானில் புதிய அரசு அமைந்த பின், முதன் முறையாக நடந்த இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|