|
| சரப்ஜித் பிரச்சனை : பரிசீலனையில் இருப்பதாக பாக். அறிவிப்பு |
| இஸ்லாமாபாத்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008 ( 18:09 IST ) | |
பாகிஸ்தானில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கிற்கு மன்னிப்பு வழங்க கோரும் விவகாரம் பரிசீலனையில் இருப்பதாக பாகிஸ்தான் அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மொகமத் சித்திக், இது தொடர்பான வேண்டுகோள் இந்திய அரசிடமிருந்து முறைப்படி வந்திருப்பதாகவும், விரைவில் இது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.
சர்ப்ஜித் சிங்கிற்கு மன்னிப்பு அளிக்கக் கோரும் கருணை மனு ஏதும் அதிபர் முஷாரப்பிடம் நிலுவையில் இல்லை என , அதிபரின் அலுவலகம் இன்று தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினர் அவரை நேரில் சந்திப்பதற்காகவும், சரப்ஜித் சிங்கை மன்னித்து விடுவிக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் கோரிக்கை விடுப்பதற்காகவும் அந்நாட்டிற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|