|
| புலிகளுடனான சண்டையில் இலங்கை ராணுவத்தினர் 150 பேர் பலி |
| கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008 ( 17:47 IST ) | |
விடுதலைப் புலிகளுடனான கடும் சண்டையில் இலங்கை ராணுவத்தினர் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 375 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தின் வடக்குப் போர்முனையான கிலாலி முதல் முகமாலை கண்டல் வரை விடுதலைப் புலிகளின் நிலைகளை குறிவைத்து இலங்கை ராணுவத்தினர் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் மிகப்பெரிய தாக்குதலைத் துவக்கினர்.
இயந்திரத் துப்பாக்கிகள், பீரங்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இலங்கை ராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டனர்.
ஆனால் இலங்கை ராணுவத்தினரின் இந்த முன்நகர்வு நடவடிக்கைக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான பதிலடி தாக்குதலை நடத்தினர்.நேற்று மதியம் 1 மணி வரை இந்த சண்டை நீடித்தது.
சுமார் 10 மணி நேரம் நீடித்த இந்தக் கடுமையான மோதலில், இலங்கை ராணுவத்தினருக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டதாக புதினம் இணைய தளச் செய்தி தெரிவிக்கிறது.
இதற்கிடையே இத்தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் சுமார் 150 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதில் 30 க்கும் மேற்பட்ட படையினரின் உடல்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுமார் 375 பேர் படுகாயமடைந்துள்ளதாக்வும் இலங்கை ராணுவ உயரதிகாரி ஒருவர் தெரிவித்ததாக கொழும்பிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலியானவர்கள், காயமடைந்தவர்களின் உடல்கள் 12 லாரிகளில் வைத்து மருத்துமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும், காயமதைந்த மேலும் பலர் விமானங்கள் மூலம் கொழும்பு பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அச்செய்தி மேலும் கூறுகிறது.
இதற்கிடையே இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தங்கள் தரப்பில் 38 பேர் கொல்லப்பட்டதாகவும், 84 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் தரப்பில் 16 பேர் உயிரிழந்ததாக அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|