யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சரப்ஜித் சிங் கருணை மனு முஷாரப்பிடம் நிலுவையில் இல்லை
இஸ்லாமாபாத் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2008   ( 14:05 IST )
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்தியரான சரப்ஜித் சிங்கை நேரில் பார்ப்பதற்கான முயற்சியில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பிடம் கருணை மனு ஏதும் நிலுவையில் இல்லை என்று அவரது அலுவலம் இன்று தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிபர் முஷாரப்பின் செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறுகையில், 'சில காலங்களுக்கு முன்னர் மட்டுமே சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரிடமிருந்து அதிபருக்கு உள்துறை அமைச்சகம் வாயிலாக கருணை மனு கிடைத்தது' என்று தெரிவித்தார்.

தற்போது கருணை மனு ஏதும் நிலுவையில் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த அவர், அதிபர் அலுவலகம் சார்பில் மட்டுமே தாம் இந்தத் தகவலைத் தெரிவிப்பதாகவும், அரசு தரப்பிலில்லை என்றும் கூறினார்.

'சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரிடம் இருந்து பெற்ற கருணை மனு குறித்து முதலில் உள்துறை அமைச்சகம் ஆலோசிக்கும். அதன்பின், பிரதமரின் பரிந்துரைக்கு அவ்வமைச்சகம் அனுப்பும்.அதன்பின்னரே, அந்தப் பரிந்துரை குறித்து அதிபர் நடவடிக்கை எடுப்பார்' என்று அவர் விவரித்தார்.

இதனிடையே, சரப்ஜித் சிங் சார்பாக கருணை மனு ஒன்றை அதிபரிடம் தாம் அளித்ததாகவும், சரப்ஜித்துக்கு எதிரான வழக்கு ஸ்திரமற்ற நிலையில் இருப்பதால், தூக்கு தண்டனையை ஆயுளாக மாற்ற வேண்டும் அம்மனுவில் கேட்டுக்கொண்டதாகவும் கடந்த திங்களன்று பாகிஸ்தானின் முன்னாள் மனித உரிமைகள் அமைச்சர் அன்சார் புரூனி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய கருணை மனுக்கள் ஏதும் பெறப்படவில்லை என்று அதிபர் அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 1990-ம் ஆண்டு லாகூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. கடந்த 1-ம் தேதியே அவரது தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆனால், இந்திய தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, தண்டனையை நிறைவேற்றுவது ஒரு மாத காலத்திற்கு அதிபர் முஷாரப் தள்ளிவைத்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'தலாய் லாமாவுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் வேண்டாம்'
ஆப்கானில் தற்கொலை தாக்குதலில் 13 பேர் பலி
நேபாள‌‌த்தில் குடியரசு ஆட்சி நிச்சயம் : மாவோ‌யி‌ஸ்‌ட் உறுதி
சரப்ஜித் சிங் குடும்பத்தினர் பாக். வந்தனர்
'சத்தமற்ற சுனாமி' : மக்களை மீட்க ஐ.நா. வலியுறுத்தல
முஷாரப்பை பதவி நீக்கம் செய்வது முக்கிய பிரச்சனையல்ல : கிலானி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace